கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்த மனைவி! நேரில் பார்த்த கணவன்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெயின்டரை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அவனது திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஓட்டுநராக  பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் அடிதடி தகராறுகள் ஏற்படுவதுண்டு என அறிந்து கொண்ட பிரபு சண்முகத்தின் மனைவிக்கு ஆறுதல் கூறுவது போன்று பேச தொடங்கியுள்ளார்.

அப்பகுதியில் பிரபு பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இந்த சம்பவத்தை அறிந்த சண்முகம் பிரபுவை கண்டித்துள்ளார். ஆனால் பிரபு சண்முகத்தின் கண்டிப்பையும் மீறி கள்ளக்காதல் செய்து வந்தார். மேலும் பிரபுவும் சண்முகத்தின் மனைவியும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

இதனை நேரில் பார்த்த சண்முகம் மிகவும் ஆத்திரமடைந்தார். நேற்று பிரபு வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பிரபு இழந்த சம்பவமானது நத்தம் பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பிரபுவின் உடலை அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று முழுவதும் சண்முகத்தை தேடி கண்டுபிடித்தனர். காவல்துறையினர் சன்முகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது