முதலில் அக்கா..! பிறகு தங்கை..! வீட்டில் இருந்து ஓடிய ராகுல்..! ரத்த வெள்ளத்தில் இளம்பெண் மரண வழக்கில் பகீர் திருப்பம்!

மூத்த சகோதரி காதலிக்க மறுத்ததால் இளைஞர் இளையவளை காதலித்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் கொசவம்பட்டி எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு பழனிசாமி என்று கூலித்தொழிலாளி பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தனியார் கல்லூரியில் பொறியியல் பிரிவில் 2-வது ஆண்டு படித்து வந்துள்ளார். இளைய மகள் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்துள்ளார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் ராகுல்.

மேலும் மூத்த சகோதரியான மோனிஷா உடன் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது ராகுல் மோனிஷா மீது காதல் வயப்பட்டுள்ளார். ஆனால் ராகுலின் பழக்கவழக்கங்கள் பிடிக்காத காரணத்தினால் மோனிஷா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காதலை சரி செய்வதற்காக ராகுல் மோனிஷாவின் தங்கையிடம் உதவி கேட்டுள்ளார். 

மோனிஷாவின் தங்கையும் ராகுலின் காதல் குறித்து அவரிடம் கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மோனிஷா ராகுலின் நடவடிக்கைகள் பிடிக்காததால் என்னால் காதலிக்க இயலாது என்று கண்டிப்பாக கூறியுள்ளார். அக்கா கிடைக்காத வருத்தம் இருந்தபோதிலும் ராகுல், மோனிஷாவின் தங்கையை காதலிக்க தொடங்கியுள்ளார். ஆனால் இதற்கும் மோனிஷா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தன் காதலியிடம் மோனிஷாவை கொலை செய்து விடலாம் என்று கூறியுள்ளார். அக்காவை கொலை செய்யப் போகிறோம் என்ற உறுத்தல் இல்லாமல் ராகுலின் காதலி ஒப்புக்கொண்டுள்ளார். நேற்றிரவு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ராகுல் மோனிஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது மோனிஷா ராகுலை வெளியே விரட்ட முயன்றுள்ளார். ஆனால் ராகுல் தன்னுடைய காதலியின் உதவியுடன் மோனிஷாவின் முகத்தில் தலையணையை வைத்து கொலை செய்துள்ளார். மோனிஷா மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தபடி உயிரிழந்துள்ளார். இதனால் பதறிப்போன ராகுல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

உடனடியாக மோனிஷா தன் சகோதரி தன் கையையும், மோனிஷாவின் கைகளையும் கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக அழகு சேர்த்தது கேட்ட உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோனிஷா உயிரிழந்துள்ளார். போலீசாரின் சகோதரிக்கு மற்றும் மருத்துவம் செய்து மருத்துவர்கள் அவரை பிழைக்க வைத்தனர்.

பின்னர் சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோனிஷாவின் சகோதரியுடன் விசாரணையில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தாக்குப்பிடிக்க இயலாத இளம்பெண் நிகழ்ந்த அனைத்தையும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். 

மோனிஷாவை கொலை செய்த குற்றத்திற்காக அவருடைய சகோதரியை காவல்துறையினர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.  மேலும் ராகுலை கொலை குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.