கணவன் கூறியும் சாமியாருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்த மனைவி! பிறகு நேர்ந்த விபரீதம்!

தன் மனைவி பூசாரியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் அவளை கொன்ற சம்பவம் ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 பூசாரியிடம் உறவு வைத்துக் கொண்டாள் குடும்பமானது செல்வம் அடையும் என்ற மூடநம்பிக்கையை நம்பி கணவன் தன் மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். மான்பால் சிங் என்பவர் ஆக்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ரஜினி. இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்தன.

ஏதோ ஒரு சாமியார் இவரிடம், உன் மனைவி என்னிடம் உடலுறவு வைத்துக்கொண்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்ற எண்ணத்தை பதிய வைத்துள்ளார். செல்வத்திற்காக பேராசைப்பட்ட மான்பால் சிங், இதுபற்றி மனைவியிடம் நிறைய முறை கூறியுள்ளார். ஆனால் ரஜினியோ இதனை மறுத்துள்ளார்.

மேலும் ஒரு நாள் இதேபோன்று நடந்து கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த மான்பால் சிங் தன் மனைவியை கங்கை நதியில் முழுகடித்துள்ளார். வியாழன் இரவு ஆற்றில் குதித்து ரஜினியின் உடலை பொதுமக்கள் மீட்டனர். இந்நிலையில் ரஜினியின் தம்பியான ராஜேஷ் சிங்கள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது தன் தங்கையை அவருடைய கணவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூசாரியான சந்த்தாஸ் ஜார்கண்டி என்ற முனிவருடன் உடலுறவு வைத்துக் கொண்டால் குடும்பத்தில் செல்வம் செழிக்கும் என்று தன் தங்கையை வற்புறுத்தியதாக தன்னிடம்  கூறியுள்ளார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எவ்வளவு முறை சொல்லிப் பார்த்தும் அவர் அந்த பூசாரியிடம் நெருங்கி பழகி, போதை பொருட்களுக்கு அடிமையானார் என்றும் கூறியுள்ளார். காவல்துறையினர் மான்பால் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஆக்ரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.