மனைவியின் சடலத்துடன் 4 நாட்கள் வாழ்ந்த கணவன்! வீட்டின் கதவை திறந்து பார்த்த நண்பர்! உள்ளே அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்!

பெங்களூருவை சேர்ந்த கார்மென்ட் கம்பெனி மேனேஜர், தன் மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்கிழக்கு பெங்களூரு, குட்லு கேட், ஏ.இ.சி.எஸ் லேஅவுட் என்ற இடத்தில் மனிஷ் குமார் (வயது 42) என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் அமைந்திருக்கும் கார்மென்ட் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பெயர் சந்தியா (வயது 35). இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து குட்லு கேட் பகுதியில் இருக்கும் தங்களது வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே டெல்லியில் வசித்து வரும் மணிஷ்குமாரின் சகோதரர் பலமுறை போன் செய்தும் அதனை அட்டன்ட் செய்யாமல் இருந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பெங்களூருவில் இருக்கும் தன் சகோதரரை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.

பின்னர் டெல்லியில் இருந்து வந்த அவர், மணிஷ் குமாரின் கதவை நீண்ட நேரமாக தட்டிக் கொண்டு இருந்திருக்கிறார். வெகுநேரமாக திறக்காததால் அருகிலிருந்தவர்கள் இடமும் மணிஷ் குமாரைப் பற்றி விசாரித்திருக்கிறார். யாருக்கும் மணிஷ் குமாரை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. உடனே அவர் மனுஷகுமாரின் வீட்டை கதவை உடைக்க முயற்சி செய்திருக்கிறார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

மனிஷ்குமார் தன்னுடைய கையில் பிளேடை வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். உடனே அங்கிருந்த அனைவரும் பிளேடை கீழே போடும்படி மணிஷ் குமாரிடம் கெஞ்சி உள்ளனர். பின்னர் மணிஷ் குமார் அங்கிருந்து தப்பி பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு இருந்திருக்கிறார். உடனே அங்கிருந்தவர்கள் மீண்டும் பாத்ரூம் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். மணிஷ் குமார் கைகள், நெஞ்சு பகுதி, கால்கள் என பல இடங்களில் பிளேடால் தன்னைத்தானே கிழித்துக் கொண்டு இருந்திருக்கிறார். 

இதனை பார்த்த அவர்கள் மனிஷ் குமாரின் கைகளில் இருந்த கத்தியை பிடுங்க முயற்சி செய்துள்ளனர். உடனே மணிக்குமார் அந்த இடத்திலிருந்து ஓடி வந்து தன்னுடைய பால்கனி வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருக்கிறார். மூன்றாவது தளத்திலிருந்து தரை தளத்திற்கு கீழே விழுந்ததால் மணிஷ்குமார் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் துரதிஸ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார்.

இதேபோல் மனிஷ் குமார் வீட்டினுள் நுழைந்த அனைவருக்கும் மற்றொரு அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது. அதாவது அவர்கள் வீட்டிற்குள் நுழையும் பொழுது இறந்த உடலில் இருந்து வெளியேறும் அழுகிய நாற்றத்தை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் வீட்டில் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது மனிஷ் குமாரின் மனைவி சந்தியா கொலை செய்யப்பட்டு போர்வை ஒன்றிற்குள் சுற்றி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மனிஷ் குமார் தன்னுடைய மனைவியையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மணிஷ்குமார் வீட்டை சோதனை செய்த பொழுது அவர்களுக்கு மனிஷ்குமார் கடைசியாக எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தை மனிஷ் குமார் கடந்த மே 12ஆம் தேதி எழுதி இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதனை வைத்துப் பார்க்கும் பொழுது கடந்த 12ஆம் தேதி மனிஷ் குமார் தன்னுடைய மனைவியை கொலை கொலை செய்திருப்பார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணத்தையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அதாவது மனிஷ் குமாரின் மனைவி சந்தியாவிற்கும் வேறு ஒரு நபருக்கும் தவறான பழக்கம் இருப்பதாகவும் அந்த பழக்கத்தை கைவிடும்படி மணிஷ்குமார் கூறிய பின்பும் அவர் அதில் நீடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிக்குமார் தன் மனைவி சந்தியாவை கொலை செய்திருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலீசார் மனிஷ் குமாரின் செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். ஆனால் அவரிடம் எந்த ஒரு பிரைவேட் சாட்டும் இல்லை என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். 

நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மனிஷ் குமார் தன் மனைவியை நான்கு நாட்களுக்கு முன்பாகவே கொலை செய்துவிட்டு அவரை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். பின்னர் செய்வதறியாது இருந்தபொழுது உறவினர்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்தவுடன் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் போலீசார் இந்த வழக்கை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.