முதலில் மனைவி! பிறகு மாமனார்! பெண் ஆசையால் 66 வயது தாத்தா அரங்கேற்றிய கொடூரம்!

மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற கணவர், உறவினர்களுடன் உணவருந்திய சம்பவமானது கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவை சேர்ந்தவர் லீ வாங் தோ. இவருடைய வயது 66. இவருடைய மனைவியின் பெயர் லீ ஹாண். லீ ஹாணின் வயது 62. லி கா சாங் என்பவர் லீ வாங் தோவின் தந்தையாராவார். 3 பேரும் ஒன்றாக கொல்கத்தாவில் வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு லீ வாங் தோ தன்னுடைய பெண் நண்பர்களுடன் இரவு விருந்துக்கு செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவியை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

ஆத்திரமடைந்த லீ வாங் தோ அருகிலிருந்த அலுமினிய வாலியால் தன் மனைவியின் தலையில் பலமாக அடித்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு அவருடைய தந்தை வெளியே வந்தார். தப்பிப்பதற்காக அவருடைய தலையிலும் பலமாக அடித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர் அங்கிருந்த வளையங்களை மறைத்துவிட்டு பின்புறமாக வீட்டை விட்டு வெளியேறினார். அவருடைய நண்பர்களும் சேர்ந்து உணவருந்திவிட்டு வீடு திரும்பினார். அப்போது எதுவும் நடக்காதவாறு வீட்டின் முன்கதவை நெடுநேரமாக தட்டி கொண்டிருந்தார். 

அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது இருவரின் சடலத்தையும் கண்டு அதிர்ந்தார். உடனடியாக காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தார். 

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணவருடன் விசாரணை நடத்தினர்.

முதலில் கொலையை மறைக்க முயன்ற லீ வாங், ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் விசாரணையில் தாக்குப்பிடிக்க இயலாமல் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.