அண்ணியுடன் தகாத உறவு! கண்டுபிடித்த அண்ணனுக்கு தம்பியால் ஏற்பட்ட விபரீதம்!

சொந்த அண்ணியுடன் உல்லாசமாக இருப்பதற்காக தன் அண்ணன் என்றும் பாராமல் அவரை தம்பி கொலை செய்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் தம்பி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இதனருகே முசுண்டப்பட்டி-துவரங்குறிச்சி நெடுஞ்சாலை உள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் அடையாளம் தெரியாத பிணமொன்று கிடப்பதாக பொதுமக்கள் அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

காலத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் வலசைப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகையா என்பவர் ஆவார் என்பதனை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் அவர் கொத்தனார் வேலை பார்ப்பதாகவும் அவருடைய வயது 40 என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் முருகையாவின் குடும்பத்தினரிடமிருந்து தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையிலேயே பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது முருகையாவின் மனைவியான மணிமேகலைக்கும், அவரின் சொந்த தம்பியான பிச்சுமணி என்பவருக்கும் நீண்ட நாட்களாக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனை முருகையாக கண்டுபிடித்து கண்டித்துள்ளார். இதனால் முருகையா இருக்கும் வரை தங்களால் உல்லாசமாக இருக்க இயலாது என்று எண்ணிய இவ்விருவர் அவரை தீர்த்துக்கட்ட திட்டங்களை தீட்டியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு முருகையா பாலத்தின் நடுவே சென்று கொண்டிருந்தபோது அண்ணன் என்றும் பார்க்காது பிச்சுமணி அவரை கழுத்தை நெறித்துக் கொன்று உள்ளார்.

பின்னர் இருவரும் பிணத்தை பாலத்தின் அடியில் போட்டு விட்டு சென்றுள்ளனர் என்று காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிமேகலை மற்றும் பிச்சுமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.