பரவிக் கிடந்த ஆணுறைகள்! அருகே 15 வயது சிறுவன் சடலம்! கைது செய்யப்பட்ட அண்ணன்! பரபரப்புக் காரணம்!

தகராறு காரணமாக சொந்த அண்ணனே தம்பியை கொலை செய்திருக்கும் சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் ஐயன்குஞ்சரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கேசவன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பராசக்தி. இத்தம்பதியினருக்கு சிவகுமார் என்ற மகனுள்ளார். இவருடைய வயது 15. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான். கேசவன் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு பணியாற்றி வருகிறார்.

நேற்று சிவகுமார் விளையாடுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் சிவகுமாரின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி அலைந்தனர்.  ஆனால் நள்ளிரவு வரை சிவகுமாரை தேடி கண்டு பிடிக்கவில்லை. 

இந்நிலையில் காட்டுப்பகுதியில் நள்ளிரவில் சடலமாக கிடந்தார். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். சிவகுமாரின் உடலுக்கு அருகில் பல ஆணுறைகள் சிதறிக்கிடந்துள்ளன. அவ்விடத்தில் நடமாடி கொண்டிருந்த சிலரை காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் விசாரித்ததில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கிராமப்புற பகுதியில் பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தனர். அதனை சிவகுமார் கண்டுள்ளார். இந்நிலையில் அவர் ஊருக்குள் சென்று கூறிவிடுவார் என்று பயந்துக்கொண்டு அவரை கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

வியூகத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை நடந்த இடத்தில் சுற்றுவட்டாரத்தில் மோப்ப நாயை காவல்துறையினர் அலையவிட்டனர். அந்த நாயானது சிவகுமாரின் அண்ணனான சரத்குமாரின் வீட்டின் முன் குரைக்க தொடங்கியது. 

காவல்துறையினர் சந்தேகித்து வீட்டில் உள்ளவர்களை விசாரிக்க தொடங்கினர். அப்போது சிவகுமாரின் அண்ணனான சரத்குமார் முன்னுக்குப் பின்னாக பதில் அளித்துள்ளார். காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமாரை கொலை செய்ததை சரத்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதாவது "எனக்கும் என் தம்பிக்கும் வீட்டில் இருக்கும்போது சண்டை சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. இதனால் என் தம்பியை கொலை செய்துவிட திட்டமிட்டேன். ஒரு நாள் நாங்கள் இருவரும் முயல் வேட்டைக்கு சென்றோம். அப்போது முயலை கொள்ள சிவகுமார் கன்னி வைக்க சென்றான். அப்போது அவனை கத்தியால் குத்தி கொலை செய்தேன்" என்று சரத்குமார் ஒப்புக்கொண்டுள்ளார் ‌

வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.