60 வயது அத்தையின் தலையை துண்டாக்கி காவல் நிலையம் எடுத்து வந்த 28 வயது மருமகன்! அதற்கு அவன் கூறிய பகீர் காரணம்!

ஒடிஷாவில் 60வயது அத்தையின் தலையை துண்டாக்கி 28 வயது மருமகன் அதனை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் குந்தா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கராகாச்சியா கிராமம் அமைந்துள்ளது. இங்கு புதரம் சிங் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவருக்கு வயது 28. இவர் வசித்து வரும் அதே பகுதியில் இவரது அத்தை டெம்பர் சிங் (வயது 60) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை படு பயங்கரமான சம்பவம் ஒன்று அந்த பகுதியில் நடந்தேறியுள்ளது.

அதாவது புதரம் சிங் தன் அத்தை என்றும் பாராமல், டெம்பரை தான் வைத்திருந்த கூர்மையான ஓர் ஆயுதத்தை பயன்படுத்தி கொலை செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவரது தலையை துண்டாக வெட்டி அதனை தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு சரண் அறிவதற்காக சென்று கொண்டிருந்திருக்கிறார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் இறந்த ஒருவரின் தலையை கையில் எடுத்து வருவதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் அவரை விசாரித்த பொழுது, கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பாக அவருடைய மகள் இறந்து விட்டதாகவும் அதற்கு காரணம் தன் அத்தை வைத்த சூனியம் தான் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.