தூங்கிக் கொண்டிருந்த மகளின் தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த தந்தை..! பதற வைக்கும் காரணம்..!

தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு தந்தை கொலை செய்துள்ள சம்பவமானது ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரான் நாட்டில் வடக்கு மாகாணமான கிலன் அருகே தலேஷ் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 13 வயதான ரொமினா அஷ்ரஃபி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதலை தெரிந்து கொண்ட அந்த இளம்பெண்ணின் தந்தை கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் தன்னுடைய வீட்டை விட்டு ஓடியுள்ளார். உடனடியாக இளம் பெண்ணின் தந்தை அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட தேடுதலுக்கு பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து பெண்ணின் தந்தையிடம் ஒப்படைத்தனர். அந்த பெண் தனக்கு பெரும் ஆபத்திருப்பதாக கூறிய பிறகும், அந்த பெண்ணை காவல்துறையினர் அவருடைய வீட்டில் கொண்டு சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் உறங்கி கொண்டிருந்தபோது அந்த பெண்ணை அவருடைய தந்தையார் தலையை அரிவாளால் வெட்டி போட்டு கொலை செய்துள்ளார் என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்வதற்கு தான் பயன்படுத்திய ஆயுதத்துடன் இளம்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்தார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த வழக்கில் விசாரணை குறித்து வழக்கு முடிவடைந்த பிறகு பகிரங்கமாக தெரிவிக்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார். இந்த செய்தியானது அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.