சோறு போட முடியல..! அதான்..! பெற்ற தந்தையை மகன் செய்த பகீர் சம்பவம்! காரைக்குடி பரபரப்பு!

வயதான தந்தையை கவனிக்க இயலாததால் மகன் அவர்களை கொலை செய்த சம்பவமானது சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் எனுமிடம் அமைந்துள்ளது. காரைக்குடிக்குட்பட்ட பெத்தாநேந்தல் எனும் பகுதியை சேர்ந்தவர் சேவுகன். இவர் மிகவும் வயதானவர். தன்னுடைய மகனுடன் தனியாக வசித்து வந்தார். அவருடைய மகனின் பெயர் வீராசாமி. நேற்றிரவு ரத்தவெள்ளத்தில் இவருடைய சடலம் வீட்டில் கிடந்தது.

உடனடியாக வீராசாமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தன் தந்தையை யாரோ கொலை செய்துவிட்டதாக வீராசாமி புளம்பி கொண்டிருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினருக்கு தொடக்கத்திலிருந்தே வீராசாமி மீது சந்தேகம் இருந்து வந்தது. உடனடியாக காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் வீரியத்தை தாக்கு பிடிக்க இயலாத வீராசாமி குடிபோதையில் தன் தந்தையை அரிவாளால் கழுத்தை வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவருடைய தந்தை வயதானவர் என்பதால் வீட்டிலேயே முடங்கியுள்ளார். வீராசாமி அவருடைய தந்தையை சரிவர பார்த்துக் கொள்ள இயலவில்லை. அதனால் குடிபோதையில் அவருடைய தந்தையை கொலை செய்துள்ளார். அவர் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.