ஒரே லாட்ஜில் மனைவி மற்றும் கள்ளக்காதலியுடன் தங்கிய கணவன்! மறுநாள் காலையில் நிகழ்ந்த விபரீதம்!

தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் என்னும் பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவியின் பெயர் சுமதி. அருளானந்ததிற்கு சில ஆண்டுகள் முன்னர் கவிதா என்னும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. தன் மனைவிக்கு தெரியாமல் பல முறை கவிதாவுடன் உல்லாசத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலத்தில் கவிதா அடிக்கடி பணம் கேட்டு அருளானந்தத்தை தொல்லை செய்துள்ளார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த அருளானந்தம் என்ன செய்வதென்று அறியாது குழம்பினார். நடந்தவற்றையெல்லாம் மனைவியிடம் கூறி விடலாம் என்று நினைத்தார் அருளானந்தம். அவ்வாறு தன் கள்ளத்தொடர்பை பற்றி மனைவி சுமதியிடம் கூறிவிட்டார். மேலும் கவிதா தன்னை பணம் கேட்டு டார்ச்சர் செய்வதையும் கூறியுள்ளார்.

கவிதாவின் பிரச்சனையை முடிப்பதற்காக சென்ற மாதம் 25-ஆம் தேதி கவிதாவை வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்தனர். அருளானந்தம், சுமதி மற்றும் கவிதா ஆகிய மூவரும் ஒரே அறையிலேயே தங்கினர். அங்கு அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி போய் ஆத்திரமடைந்த அருளானந்தம் கவிதாவை கொலை செய்து விட்டார். அருளானந்தமும் சுமதியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இரண்டு நாட்களாகியும் அறையை காலி செய்யாமல் இருந்ததால் விடுதி மேலாளருக்கு சந்தேகம் வந்துள்ளது. கதவை உடைத்து பார்த்தபோது ஒரு பெண் இறந்து கிடந்தார். உடனே அவர் அப்பகுதியை காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அருளானந்தம் மற்றும் சுமதியை  காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் காவல்துறையினர் சுமதியை கைது செய்துள்ளனர். ஆனால் அருளானந்தம் தலைமறைவாக உள்ளார்.

இந்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.