ஒரே ஒரு பெண்! ஒரே ஒரு வீடு! ஒரே நேரத்தில் உள்ளே வந்த இரண்டு ஆண்கள்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் கவுண்டப்பனூர் செவ்வாதாதான் வட்டம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய வயது 40. இவருடைய மனைவியின் பெயர் ஜெயந்தி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். துபாயில் கம்பி கட்டும் வேலையில் பணிபுரிந்து வரும் ரமேஷ் சில நாட்களுக்கு முன்னர், சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்.

விடுமுறையில் வந்தவுடன் ரமேஷ் தன்னுடைய வீட்டிற்கு அருகேயுள்ள பெண் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். ஏற்கனவே கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தை சேர்ந்த பூக்காரரான கிருஷ்ணன் என்பவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளன.

சம்பவத்தன்று இரவு ரமேஷ் அந்த பெண்ணின் வீட்டிற்கு முதலில் சென்றுள்ளார். அதன் பின்னர் கிருஷ்ணனும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் ரமேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆவேசமடைந்த கிருஷ்ணன் தன்னிடமிருந்த கத்தியால் ரமேஷ் சரமாரியாக வெட்டியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல்துறையினர் கொலையாளியான கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணும் அவருடைய கணவரும் தலைமறைவாகிவுள்ளனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.