தாய்! தந்தை! அண்ணன்! தங்கை! வரிசையாக நான்கு பேரை வெட்டி வீசிய இளைஞன்! பதற வைக்கும் காரணம்!

தன் மொத்த குடும்பத்தையே போன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவமானது கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கனடா நாட்டில் ஒன்ராறியோ என்னும் என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட மார்க்கம் என்னும் பகுதியில் மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருடைய வயது 23. இவர் இணைய விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு உடையவர். இவருடைய தந்தையின் பெயர் மோனிருஸ். 1980-ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் இருந்து மோனிருஸ் கனடா நாட்டிற்கு இடம்பெயர்ந்தார். சென்ற மாதம் இவர் தன் மனைவியுடன் தங்களுடைய 25-ஆவது திருமண நாளை கொண்டாடினார். 

இணையதள விளையாட்டுக்களில் அதீத ஈடுபாடு உடைய ஜமாத் தன் வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டு அந்த தகவல்களை குறுஞ்செய்திகளாக ஜமாத் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"என் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டேன். நான் உயிருடன் பிடிபட்டால் எனக்கு ஆயுள் அல்லது மரணதண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த தகவலினை இணையதளத்தில் கண்ட சிலர் கனடா நாட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உடன் காவல்துறையினர் விரைந்து ஜமாதின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரில் உடல்களை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜமாதை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.