உன் கணவன் இருக்கார்! நானும் இருக்கேன்! உனக்கு 3வதா ஒருத்தன் கேட்குதா? பெண்ணிற்கு ஆசை நாயகனால் நேர்ந்த பயங்கரம்! தாம்பரம் பகீர்!

வண்டலூரில் பெண் ஒருவர் வேறொரு ஆண் நபரிடம் பேசி வருவதை அறிந்த கள்ளக்காதலன் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யசோதா ராணி (வயது 42) என்பவர் வண்டலூரில் தனது கணவர் மற்றும் மகள் மகனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இவர் புது பெருங்களத்தூர் பகுதியில் அமைந்திருக்கும் பாரதி நகரில் சொந்தமாக தையல் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கிழக்கு தாம்பரத்தில் அமைந்திருக்கும் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45). செல்வகுமாருக்கும் யசோதா ராணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். 

எப்பொழுதும்போல் நேற்றைய யசோதா ராணி தன் கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது மதிய வேளையில் செல்வகுமார் யசோதாவை சந்திப்பதற்காக கடைக்கு வந்து இருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த செல்வகுமார் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து யசோதாவின் கழுத்தில் குத்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட யசோதா ராணி சம்பவ இடத்திலேயே வலி தாங்க முடியாமல் துடிதுடித்து உயிரிழந்தார்.

யசோதா ராணியை கத்தியால் குத்திவிட்டு செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தப்பி ஓடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு போலீசார் செல்வகுமாரை கண்டறிய திட்டமிட்டனர். பைபாஸ் ரோடு பாலத்தின் அடியில் மறைந்திருந்த செல்வகுமாரை போலீசார் கண்டறிந்தனர். அவரை பிடித்து விசாரித்த பொழுது அவருக்கும் யசோதா ராணிக்கும் இடையே திருமணத்திற்கு முன்பே பழக்கம் இருந்ததாகவும் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை அறிந்து செல்வக்குமாரின் மனைவி அவரைவிட்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். 

இதனையடுத்து மீண்டும் யசோதா ராணியை சந்தித்து கள்ளத்தொடர்பில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சமீப நாட்களாக ராதா ராணி வேறொரு ஆண் நண்பருடன் பேசி வந்ததை செல்வகுமார் பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் யசோதா ராணியின் மகளின் பிறந்தநாளுக்கு கேட்கும் அந்த நபர் வாங்கி அளித்துள்ளார். இதனைப் பற்றி கேட்ட பொழுது தான் சுகாதார அமைப்பும் செல்வா குமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரம் தாங்காத செல்வகுமார் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து விசாரணை நடத்தியதாக அவரே தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.