கர்ப்பிணி மனைவி! கெஞ்சிய 2 குழந்தைகள்! துடிக்க துடிக்க கொன்றது ஏன்? கணவன் வெளியிட்ட நெஞ்சை பதற வைக்கும் தகவல்!

வேறொரு பெண்ணுடன் வாழ்வதற்காக மனைவி மற்றும் 2 குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் கொலராடோ என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட பிரெடரிக் நகரத்தை சேர்ந்தவர் கிரிஸ் வாட்ஸ். இவருடைய வயது 34. இவருடைய மனைவியின் பெயர் ஷானன். இத்தம்பதியருக்கு என்ற 4 வயது மகளும், செலஸ்டா என்ற 3 வயது மகளும் இருந்தனர். 

இதனிடையே ஷானன் மீண்டும் கர்ப்பமானார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதியன்று, கிறிஸ்து தன்னுடைய 2 குழந்தைகளையும் கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் அது இயலவில்லை. உடனடியாக தன்னுடைய மனைவியின் அழைத்து சென்று அவரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொலை செய்தார். பின்னர் தன்னுடைய 2 குழந்தைகளையும் நெடுந்தூரத்துக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளார். இவை அனைத்தையும் அவர்,  நிக்கோல் கேசிங்கர் என்ற பெண்ணுடன் வாழ்வதற்காகவே செய்துள்ளார்.

இந்த தகவல்களை கிரிஸ், செரில் க்லேடன் என்பவருக்கு கடிதம் மூலம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், "என்னுடைய மூத்த மகளான பெல்லாவுக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்பது தெரிய வந்தது. அவள் என்னிடம், "வேண்டாம் அப்பா வேண்டாம்!!!" என்று கதறியது என் வாழ்நாள் முழுவதும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்று எழுதியிருந்தார். 

மேலும் இந்த கடிதத்தை அவருடைய புத்தகத்தில் பதிவிடுவதற்கும் கிரிஸ் அனுமதி அளித்திருந்தார். இந்தக் கடிதமானது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.