நள்ளிரவு..! கும் இருட்டு..! வீட்டு பெட்டூம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் மர்ம மனிதன்! கோவை திகுதிகு!

இரவு நேரங்களில் இளைஞர் ஒருவர் வீடுகளை கண்காணித்தபடி செல்லும் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகியுள்ளன.


கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள மருதம் நகர், பாரதி காலனி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் நடமாடுகிறார். இருசக்கர வாகனங்களில் வரும் அவர், சில வீடுகளை தேர்ந்தெடுத்து அவற்றின் ஜன்னல்கள் மூலம் நோட்டமிட்டு வருகிறார்.

குறிப்பாக வீடுகளின் பெட்ரூம் ஜன்னல் வழியாகவே இவன் எட்டிப்பார்க்கிறான். இந்த சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் திருடன் புகுந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக இவ்விரு பகுதி மக்களும் துடியலூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். 

இந்த சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் வீடுகளை வந்து இப்படி எட்டி பார்ப்பது யார் என்று மக்கள் பீதியில் உள்ளனர். இரவு நேரத்தில் இப்பகுதியில் போலீசார் ரோந்து வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.