ஓடும் பேருந்தில் 20 மாணவிகளின் அங்கங்களை தொட்டு சில்மிஷம்! நெல்லை பரபரப்பு!

ஓடும் பேருந்தில் மாணவிகளிடம் போதையில் இருந்த நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கன்னியாகுமரியில் நடைபெற்ற உயர்கல்வி குறித்த ஆராய்ச்சி கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக பேருந்தில் சென்றுள்ளனர். ஆராய்ச்சி கருத்தரங்கில் வெற்றிகரமாக கலந்து கொண்டவர்கள் மீண்டும் நெல்லை அரசுப்பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்தில் போதையில் இருந்த நபர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக பேசியுள்ளார். உடனடியாக அவர்கள் ஓட்டுநரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஓட்டுநர் அந்த நபரை கண்டித்துள்ளார். இருப்பினும் போதையிலிருந்த நபர் அடங்காமல் மாணவிகளையும் ஓட்டுநரையும் அவதூறாக பேசியுள்ளார்.

இதுகுறித்து மாணவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில், பேருந்தின் வருகைக்காக காத்து கொண்டிருந்தனர். பேருந்து வந்தவுடன், போதையில் நபரை பிடித்து காவல்துறையினர் தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவமானது நெல்லை பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.