தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் செக்ஸ் சீண்டல்! உமன்ஸ் ஹாஸ்டல் ரூம் வீடியோ வைரல்!

குஜராத் மாநிலத்தில் நள்ளிரவில் மகளிர் விடுதியில் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை சி.சி.டி.வி.காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.


அகமதாபாத் நகரின் நவ்ரங்புரா என்ற இடத்தில் உள்ள மகளிர் விடுதி வழியாகச் சென்ற நபர் நள்ளிரவு நேரத்தில் லேசாகத் கதவு திறந்திருப்பதைக் கண்டு  உள்ளே நுழைந்தான். அப்போது சுத்தம் செய்யும் பெண் வரவேற்பரையில் உள்ள சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த்ஹார்.

அந்தப் பெண்ணை கண்டதும்  அவர் உறங்கிக் கொண்டிருந்ததும் அத்துமீறலுக்கு வாய்ப்பாக இருந்தது. உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை அவன் தொடக் கூடாத இடங்களில் தொட்டு அத்துமீறிக் கொண்டிருந்த போது அங்கு வந்த விடுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் கத்தி கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் தப்பியோடிவிட்டான்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விடுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் அந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டது தெளிவாக பதிவாகியிருந்தது. மேலும் அந்த நபர் உணவு டெலிவரி செய்யும் ஊழியரான பவின் ஷா என்று தெரியவந்தது. தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.