வேறு ஒருவருடன் திருமணமான காதலியை கர்ப்பமாக்கிய இளைஞன்..! உண்மை தெரியவந்த பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

திருமணமான தன் முன்னாள் காதலியை காதலன் தீ வைத்து கொலை செய்துள்ள சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள வி.பரங்கனி என்னும் கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 32. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

நீண்ட காலம் காதலித்து வந்த நிலையில் திடீரென்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடிக்க தொடங்கின. இதனால் இருவரும் காதலை முறித்துக்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கும் வேறு ஒரு இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் ராஜசேகர் மீண்டும் அந்த பெண்ணுடன் பேச தொடங்கியுள்ளார்.

மீண்டும் இருவரும் நெருங்கி பழக தொடங்கியுள்ளனர். அப்போது சில முறை இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதனால் திடீரென்று சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பம் ஆகியுள்ளார். உடனடியாக அவர் இந்த செய்தியை ராஜசேகரிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வற்புறுத்தல் அதிகமாக ராஜசேகர் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று திடீரென்று அருகிலிருந்த மண்ணெண்ணெயில் பாதிக்கப்பட்ட பெண் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது வானூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.