கல்யாணம் பண்ணிக்க மாட்டியா? நள்ளிரவில் வெளியே வந்த இளம் பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞன்! அதிர்ச்சி காரணம்!

ஒருதலைபட்சமாக காதலித்து வந்த பெண்ணை காதலர் தீவைத்து எரித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு நிதின் என்பவர் வசித்து வந்தார். எர்ணாகுளத்தில் அருகே உள்ள காக்கநாடு என்னும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை நிதின் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார்.

நிதின் தன்னுடைய காதலை அந்தப் பெண்ணுக்கு புரிய வைப்பதற்கு நிறைய முறை முயற்சித்தார். ஆனால் அந்தப் பெண் அது குறித்து கவலைப்படவில்லை. இதனால் நிதின் கடுமையாக கோபம் அடைந்தார்.

தன் காதலை அந்த பெண் புரிந்து கொள்ளாததால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் நிதின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். தனக்கு நிகழப்போகும் அசம்பாவிதத்தை உணராமல் அந்த பெண் சென்றார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அந்த பெண் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். 

பின்னர் தன் மீதும் ஊற்றி தீக்குளித்துள்ளார். மகளின் அலறல் சத்தத்தை கேட்டு அலறி அடித்து வந்த தந்தை அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை. தற்போது உடல் முழுவதும் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது