4 நாட்கள்..! 4 ஆண்கள்..! மாறி மாறி அரங்கேற்றிய படுபாதக செயல்..! எஸ்டி பெண்ணுக்கு கணவன் முன் நேர்ந்த துயரம்!

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின பெண்னை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் 3 நாட்களாக பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவரும் நாகர்கர்னூல் பகுதியை சேர்ந்தவர்களாவர்‌. இவர்கள் அதே பகுதியிலுள்ள பறவை பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். இந்தப் பண்ணைக்கு ராம்பிரசாத் ரெட்டி என்பவரே உரிமையாளர் ஆவார்.

தம்பதியினரை 15,000 ரூபாய் சம்பளத்திற்காக ராம்பிரசாத் ரெட்டி மே மாதத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டார். ஆனால் 2 மாதங்கள் மட்டுமே சம்பளம் கொடுத்துவிட்டு, பிற மாதங்களுக்கு சம்பளமே அளிக்கவில்லை. செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தங்களுடைய பாக்கியை செலுத்துமாறு தம்பதியினர் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னுடைய நண்பரின் பண்ணையில் வேலை இருப்பதாகவும், முடிந்தவுடன் சம்பள பாக்கியை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இருவரையும் காரில் பழமையான பில்டிங்க்கு அழைத்து சென்றார். அங்கு இருவரையும் வெவ்வேறு அறைகளில் அடைத்தார். கணவர் அடைக்கப்பட்ட அறையில் ரவுடிகளை கொண்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். ராம்பிரசாத் மற்றும் அவருடைய 3 நண்பர்கள் அந்தப்பெண்ணை 3 நாட்களாக பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.இந்த கோர சம்பவங்களானது 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அரங்கேறியுள்ளன.

ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து ராம்பிரசாத் பண்னைக்கு தம்பதியினர் சென்றனர். ஆனால் அவர் நடந்த சம்பவங்களைப் பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். ஒருவழியாக தம்பதியினர் ராச்கொண்டா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 4 பேர் மீது  வழக்குபதிவு செய்தனர்‌.

கணவன்-மனைவி இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.