ஊரடங்கில் வீட்டில் தங்க இடம் கொடுத்த நண்பனின் மனைவியை இழுத்துக் கொண்டு ஓடிய இளைஞன்! மூன்றே நாளில் மயக்கிய விபரீதம்!

ஊரடங்கின் பொது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர், நண்பரின் மனைவியுடன் ஓட்டம் பிடித்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தாக்குதல் கேரளாவில் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் உலகிற்கு வைரஸ் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று எடுத்துக் காட்டும் அளவிற்கு கேரளா மாநிலம் தடுப்பு பணியில் மிகவும் அற்புதமாக ஈடுபட்டுள்ளது. 

கேரளாவிலுள்ள மூணாறு எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வந்த நபர் ஒருவர் வேலை நிமித்தமாக எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய வேலையை இழந்து எர்ணாகுளத்தில் தவித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட நபரின் பால்ய சினேகிதன் அந்த செய்தியை பார்த்துள்ளார். உடனடியாக அதிகாரிகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் ஊரடங்கு முடியும்வரை தன்னுடைய வீட்டிலேயே வைத்துக் கொண்டு தங்குவதற்கு இடமும், உணவும் அளித்து வந்துள்ளார். 

மூணாறில் கொஞ்சம் கொஞ்சமாக வைரஸ் தாக்குதல் குறைந்ததால் தற்போது பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நண்பர் தன்னுடைய பாலியல் சினேகிதனை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் வேலைக்கு செல்லாமல் நண்பரின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கி வந்துள்ளார். இது நண்பருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென்று ஒருநாள் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர் நண்பரின் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார். அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் செய்த தீவிர தேடுதல் வேட்டையில் நண்பரும் ஓடிப்போன பெண்ணும் சிக்கி கொண்டனர்.

பின்னர் காவல்துறையினர் ஓடிப்போன பெண்ணுக்கு எவ்வளவோ அறிவுரை கூறினர். ஆனால் எதனையும் அந்த பெண் பொருட்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி கணவர் வாங்கிக்கொடுத்த வீடு மற்றும் நகைகளை சொந்தமாக்கிக் கொண்டு கணவரின் காதலர் உடனே வாழ்வதற்கு ஆசைப்படுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். 

இந்த செய்தியானது கேரளாவின் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.