இயற்கைக்கு மாறான உடலுறவு! ஃபிராடு கணவனால் இளம் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!

ஹரியானா மாநிலத்தில் மனைவியை இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு கட்டாயப் படுத்தியதோடு நீதிபதி மீது பாலியல் புகார் கொடுக்க கட்டாயப்படுத்தியதாக கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்துக்குட்பட்ட டவ்ரு என்ற நகரத்தைச் சேர்ந்த  பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது கணவனான ஹசார்கான் தன்னை கட்டாயமாக மதம் மாற்றி கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு தனது கணவன் தன்னை அடிக்கடி தாக்கியதோடு மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். வழக்கமான முறையில் அல்லாமல் ஆபாச படங்களை பார்த்து அதில் வருவது போல் தன்னை செய்யுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறி அந்த பெண் அதிர வைத்துள்ளார்.

இந்நிலையில் பிறரிடம் பணம் பறிப்பதற்காக அவர்கள் மீது பாலியல் பலாத்கார புகார் அளிக்க தனது கணவன் கட்டாயப் படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட விரோத ஆயுத வழக்கில் சிறையில் இருந்த தனது கணவன் சிறையில் இருந்து  ஜாமீனில் வந்த பின் போலீசார் மீது கூட்டுப் பாலியல் பலாத்கார புகார் அளிக்க கட்டாயப்படுத்தியதாகத் அந்தப் பெண் தெரிவித்தார். 

கடந்த மாதம் தனது கணவனின் கட்டாயத்தின் பேரில் வேறு சிலர் மீது கூட்டுப் பாலியல் புகார் அளித்ததாகவும், கூறினார். இந்நிலையில் ஒரு நீதிபதி மீது பாலியல் புகார் கொடுப்பது தொடர்பாக ஒரு வழக்கறிஞருடன் தனது கணவன் ஆலோசனை நடத்தியதாகவும் அதற்கு தான் மறுத்ததால் தனது மகளை கொன்று விடப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் தனது உறவுக்காரப் பெண் ஒருவரின் உதவியுடன் அந்தப் பெண் தனது கணவன் மீது  அளித்த புகாரின் பேரில் பல்வேறு  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஹசார்கானை கைது செய்துள்ளனர்.