அடுத்தவன் பொண்டாட்டியுடன் தலைப் பொங்கல்..! புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட பயங்கரம்! கிருஷ்ணகிரி பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக திருமணம் செய்து தலைப் பொங்கல் கொண்டாடிய புதுமாப்பிள்ளை ஒருவரை தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் வேன் ஓட்டுனர் மாரிமுத்து ( வயது 30) என்பவர் வசித்துவருகிறார். மாரிமுத்துவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது இந்நிலையில் அவர் தன்னுடைய தலைப்பொங்கல் புது மனைவியுடன் கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். பொங்கல் கொண்டாட்டத்திற்காக மாரிமுத்து தன் வீட்டில் இருந்துள்ளார்கள்.

வீட்டிலேயே இருந்த மாரிமுத்து திடீரென்று அங்கிருந்த ஏரிக்கரையில் சடலமாக நேற்றையதினம் அதிகாலைப் பொழுதில் மீட்டெடுக்க பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது தலையில் யாரோ ஒருவர் பாறாங்கல்லை போட்டு கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி அதனை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் என்பது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

மாரிமுத்து வசித்து வரும் அதே பகுதியில் தீர்த்த செல்வன் என்ற ராணுவ வீரர் வசித்துவருகிறார். இந்நிலையில் தீர்த்த செல்வனின் மனைவி ஈஸ்வரி உடன் மாரிமுத்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார் இதனை அறிந்த தீர்த்த செல்வன் மாரிமுத்துவை பல முறை கண்டித்து இருக்கிறார் இருப்பினும் மாரிமுத்து தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாத தால் தீர்த்த செல்வன் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்.

இதனால் தீர்த்த செல்வன் தன்னுடைய நண்பர்களான கோவிந்தராஜ் மற்றும் கேசவன் ஆகியோருடன் இணைந்து மாரிமுத்துவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார் கோவிந்தராஜ் மாரிமுத்துவை பிடிப்பதற்காக அருகிலிருந்த ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அப்போது போதையில் தள்ளாடிய மாரிமுத்துவை கோவிந்தராஜ் தீர்த்த செல்வன் மற்றும் கேசவன் ஆகியோர் இணைந்து தலையில் போட்டு கொலை செய்துள்ளனர்.

சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் கேசவன், தீர்த்த செல்வன் மற்றும் கோவிந்தராஜன் ஆகிய மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.