அந்த தாத்தா சாக்லேட் வாங்கி கொடுத்து அப்படி செஞ்சார்..! பெற்ற தாயிடம் 7 வயது சிறுமி கூறிய பகீர் தகவல்! மதுரை சம்பவம்!

பக்கத்து வீட்டு சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் சத்யசாய் நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ரங்கசாமி என்ற 66 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று காலை 7 வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சிறுமியின் தாயார் வெளியே சென்றுள்ளார். அப்போது ரங்கசாமி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். அதன் பின்னர் ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறியுள்ளார்.

உடனடியாக தாயார் திலகர் நகரிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி ரங்கசாமி மீது புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் ரங்கசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.