திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவரை ஏமாற்றிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாணம் பண்ணிக்குறதா சொன்னான்..! நம்பிய 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞன்! கிருஷ்ணகிரி பகீர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் எனும் இடம் அமைந்துள்ளது. நீங்க 17 வயது சிறுமி ஒருவர் 10-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவருடன் சிறுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பூவரசனின் வயது 24. இவர் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இதனிடையே இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் உல்லாசமாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமானார்.
தற்போது அந்த சிறுமி பூவரசனை தன்னை திருமணம் செய்து கொள்ளக்கூறி வற்புறுத்தியுள்ளார். ஆனால் பூவரசன் திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். சிறுமி வேறு வழியின்றி நிகழ்ந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.
உடனடியாக சிறுமியின் பெற்றோர் மத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பூவரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.