வீட்டுக்கு அடிக்கடி வந்து போன கணவரின் நண்பர்! காம வலையில் வீழ்த்திய மனைவி! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததால் நெருங்கிய நண்பரை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள சந்தம்பட்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அப்பகுதியில் கட்டிட கான்ட்ராக்ட் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை பிரிந்து தன்னுடைய தந்தையான ராமமூர்த்தியுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே 27-ஆம் தேதியன்று பெரியசாமி திடீரென்று மாயமானார். இது தொடர்பாக ராமமூர்த்தி அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் செந்தில் குமார் என்ற கட்டிட தொழிலாளி கைது செய்தனர். அவரிடம் விசாரணையில் ஈடுபட்ட போது பல திடுக்கிடும் உண்மைகளை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாமரை நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் பெரியசாமிக்கு தொழில்ரீதியான பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நண்பர்களாகினர். ஆதலால் பெரியசாமி அடிக்கடி செந்தில் குமாரின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அவருக்கும் செந்தில்குமாரின் மனைவியான சரண்யாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக திரிந்து வந்தனர். நாளடைவில் இதனை தெரிந்துகொண்ட செந்தில்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் 2 மாதங்களுக்கு முன்னர் சரண்யாவை பெரியசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு அழைத்து சென்று தங்கியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த செந்தில்குமார் பெரியசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

கூட்டாளிகளை ஏற்பாடு செய்து செந்தில்குமாரை கொன்றுவிட்டார். அவருடைய சடலத்தை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காணிப்பாடி எனுமிடத்தில் புதைத்திருந்தார்.

காவல்துறையினர் அங்கு சென்று உடலை மீட்டு எடுத்த போது கல்லால் தாக்கப்பட்டும், மர்ம உறுப்பு நசுக்கப்படும் பெரியசாமி கொலை செய்யப்பட்டதாக உணர்ந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.