வீட்டில் யாரும் இல்லை..! 16 வயது சிறுமியை நம்பிச் சென்ற இளைஞன்..! திடீரென வந்த தந்தை - அண்ணன்..! நொடியில் நேர்ந்த பயங்கரம்!

இன்ஸ்டாகிராம் தோழியின் வீட்டிற்கு சென்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமானது பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சின்னான்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனின் மகனின் பெயர் கௌதம். கௌதம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த சில வாரங்களாக இவருக்கு சமூக வலைத்தளத்தில் 16 வயதான இளம்பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் செல்போன் பேசிக்கொள்ளும் வரை நெருங்கிப் பழக தொடங்கினர். அந்த இளம் பெண்ணை நேரில் சந்திப்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கௌதம் சென்றுள்ளார்.

இருவரும் தனிமையில் பேசி கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண்ணின் தந்தை, அண்ணன், மாமா ஆகியோர் எதிர்பாராவிதமாக வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டின் வாசலில் கௌதமின் செருப்பை பார்த்தவுடன் சந்தேகித்த அவர்கள் வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது கட்டிலுக்கு அடியில் மறைந்து கிடந்த கௌதமன் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக கிரிக்கெட் பேட் முதலிய கனமான பொருட்களால் கௌதமை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த கௌதம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கௌதமை மேல்சிகிச்சைக்காக மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இளம்பெண்ணின் தந்தை அண்ணன் மற்றும் மாமன் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவானது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், உயிருக்கு போராடி வந்த கௌதம் நேற்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் கொலைமுயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள