கொரோனா பீதி! ஊரை விட்டு வெளியேறிய இளைஞன் கோடீஸ்வரன் ஆன திருப்பம்! எப்படி தெரியுமா?

கேரளாவில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனது சொந்த ஊருக்கு சென்ற அவருக்கு அங்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.


 30 வயதாகும் ரிஜருல் என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மிர்சாபூரை சேர்ந்தவர் ஆவார். தச்ச ராக வேலை செய்து வந்த அவர் போதிய வருமானம் இல்லாததால் சொந்த ஊரிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேலை தேடி சென்றார். அங்கு கடுமையாக உழைத்து வேலை செய்ததால் தினக்கூலியாக அவருக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்து வந்தது.

இந்நிலையில் தற்போது உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கேரளாவில் சற்று வேகமாக பரவி வந்தது. இதனால் அதற்கு பயந்து தனது சொந்த ஊரான மிர்சாபூருக்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். சொந்த ஊரில் சரியான வேலை கிடைக்காததால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

இந்நிலையில் தற்காலிகமாக கிடைத்த வேலைகளை செய்து வந்த அந்த நபர் லாட்டரி சீட்டுகளை அந்த ஊரில் வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுப் பணம் கிடைத்துள்ளதால் அந்த இளைஞர் கோடீஸ்வரனாக தற்போது மாறியுள்ளார்.

இந்நிலையில் மகிழ்ச்சியில் உள்ள அந்த இளைஞர் கூறுகையில் இனிமேல் தச்சுவேலை நான் செய்யப்போவதில்லை. சொந்தமாக தொழில் ஆரம்பிக்க போகிறேன் எனவும் அவர் கூறினார். மேலும் சொந்த வீடு கட்டி எனது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க லாட்டரி சீட்டில் விழுந்த பணத்தை நான் பயன்படுத்துவேன் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.