பெற்ற தாய் தந்தையை வெட்டிக் கொன்று மூட்டை கட்டி வீட்டு மாடியில் வைத்த மகன்..! பெரம்பலூர் திக் திக் சம்பவம்..!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் தன்னுடைய சொந்த பெற்றோரை கொலை செய்துள்ள சம்பவமானது பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தின் லாடபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வரலாறு படித்த பட்டதாரி ஆவார். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தன்னுடைய தாய் வீட்டில் ரமேஷ் வசித்து வந்துள்ளார். மனைவி தன்னை பிரிந்த சென்றதிலிருந்தே மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவருக்கு மன அழுத்தம் அதிகமாகி உள்ளது. 

அப்போது எதிர்பாராவிதமாக தன்னுடைய தந்தை ராமசாமி மற்றும் தாய் செல்லம்மாள் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் இருவரது சடலங்களையும் தனித்தனியாக சாக்குப்பையில் கட்டி தனி அறையில் வைத்துள்ளார். 

வீட்டின் மொட்டை மாடியில் ஏறி கையில் அரிவாளுடன் உட்கார்ந்துள்ளார். வீட்டிற்கு யார் வந்தாலும் அரிவாளால் வெட்டுவேன் என்று அனைவரையும் பயமுறுத்தியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அப்போது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போதிலும் ரமேஷ் மூர்க்கமாக இருந்துள்ளார். 

உடனடியாக காவல்துறையினர் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் வழியாக ஏறி சென்று ரமேஷை கைது செய்தனர். பின்னர் இருவரது சடலங்களையும் மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ரமேஷ் தன் பெற்றோரிடம் நிறைய முறை முறையிட்டுள்ளார். ஆனால் அது நடக்காத காரணத்தினால், ரமேஷ் அவர்களை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளனர்.  

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.