தம்பி மனைவியை தன் மனைவியாக நினைத்த அண்ணன்! விபரீத எண்ணத்தால் அரங்கேறிய பயங்கரம்! நாமக்கல் திகுதிகு!

தம்பியின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த அண்ணனை தம்பி வெட்டி கொலை செய்த சம்பவமானது கெங்கவள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே ஆணையம்பட்டி என்னும் இடத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் ராமர் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 41. இவருடைய மனைவியின் பெயர் சாந்தி. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். 4 மாதங்களுக்கு முன்னால் சாந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே மணக்காடு என்னும் பகுதியில் ராமருக்கு சொந்தமான வயல்வெளி உள்ளது. அதற்கு உட்பட்ட கிணற்றில் மின்கம்பங்களில் சுற்றப்பட்டு ராமர் இறந்து கிடந்தார். அவரை நன்றாக அடித்து கொலை செய்த பின்னர் மின் தாக்கி உயிர் இழந்தது போன்ற நாடகம் ஆடுவதற்காக அவ்வாறு செய்திருந்தனர்.

இதனிடையே அங்கு வசித்து வந்த ராமரின் சித்தப்பா மகனான கலியமூர்த்தி (38) மற்றும் அவருடைய மனைவியான கனகா (34) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதாவது ராமர் வயல்வெளிக்கு வரும்போதெல்லாம் கனகாவிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனை கனகா தன்னுடைய கணவரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. முதலில் உறவினர் ஒருவர் பஞ்சாயத்து செய்து கருப்பன் கோவிலுக்கு சென்று ராமரிடம் சத்தியம் வாங்கி கொண்டுள்ளனர். 

ஆனால் நேற்று முன்தினம் மீண்டும் வயல் வெளிக்கு வந்த ராமர் கனகாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனகா தன்னுடைய கணவரிடமும், அப்பாவிடமும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மண்வெட்டியால் ராமரை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். மேலும் இதுபோன்ற இருப்பதற்காக அவருடைய உடலில் மின்சார கம்பிகளில் சுற்றி உள்ளனர். 

காவல்துறையினர் கனகா கலியமூர்த்தி மற்றும் கனகாவின் அப்பாவான ராமர் (60) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.