நேரலையில் பெண் செய்தியாளர் கன்னத்தில் பளிச் முத்தம்! திடீரென அரங்கேறிய சம்பவம்! ஸ்தம்பித்துப போன டிவி சேனல்!

பெண் ஊடகவியலாளருக்கு நேரலையின் போது ஒருவர் முத்தம் அளித்துள்ள சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் கென்டகி மாகாணத்தில் நடந்து வரும் திருவிழாவை படம் பிடிப்பதற்காக தனியார் ஊடகத்தை சேர்ந்த ரிவெஸ்ட் என்ற பெண் சென்றார். அப்போது அவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மர்ம நபர் ஒருவர் வந்து அவருடைய கன்னத்தில் முத்தமிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

ரிவெஸ்ட் தன்னை சமாளித்து கொண்டு அந்த ஷாட்டை முடித்தார். அந்த நிகழ்வு பற்றி அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது அவர் மனமுடைந்து உள்ளார். அந்தப் பேட்டியை மீண்டும் மீண்டும் பார்த்தபோது அவர் மிகவும் எரிச்சல் அடைந்துள்ளார்.

மேலும் அந்த நபர் அவருடைய பின்புறத்தில் அடிப்பது போன்று சைகையும் செய்துள்ளார். இத்தகைய செயல்கள் அவருக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்துள்ளன.

ஒரு வழியாக அவர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் மர்ம நபரை தேடி அலைந்தனர். பின்னர் 42 வயதான குடுல்மேன் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் விளையாட்டுக்காக செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ஊடகவியலாளரின் மனதை புண்படுத்துவது நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர், ரிவெஸ்ட் அவர் மீது  பதிவு செய்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.