திருமணமான சில நிமிடங்களிலேயே மணமகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்திய சம்பவமானது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 மாதம் காத்திருந்து பெண்ணை கரம் பிடித்த இளைஞர்..! நிக்காஹ் முடிந்து மாப்பிள்ளை முதலிரவுக்கு தயாரான போது வந்த அதிர்ச்சி தகவல்!

சென்னை தாம்பரத்தில் ஷெரீஃப் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் விருதுநகரை சேர்ந்த நசீமா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொரோனா தாக்குதலினால் ஷெரீஃப் சென்னையிலேயே தங்கிவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் இவர்களுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமண நாள் நெருங்கியதால் ஷெரீஃப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இ-பாஸ் வாங்கிக்கொண்டு விருதுநகருக்கு சென்றனர். விருதுநகர் மாவட்டத்தின் எல்லையில் இவர்கள் அனைவருக்கும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் திருமண நாளான இன்று நிச்சயக்கப்பட்டவாறு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த சில நிமிடங்களிலேயே சுகாதாரத்துறை அதிகாரிகள் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் மணமகன் ஷெரீஃபுக்கு கொரோனா இருப்பதாக கூறினர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர்.
இந்த சம்பவமானது ஷெரீஃப் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஷெரீஃப் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.