மனைவியின் தகாத நட்பு! கண்டுபிடித்த கணவன்! நடுரோட்டில் சிக்கிய காதலன்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

பெண்ணின் கணவரும், அவளுடைய நெருங்கிய நண்பரும் பொது இடத்தில் சண்டை போட்ட சம்பவமானது கொலம்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொலம்பியா நாட்டில் டோலிமா எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து இந்த பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த 35 வயது நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பெண் தன் கணவனை ஏமாற்றி, தன் நண்பருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். சில மாதங்கள் கழித்து இதனை அறிந்து கொண்ட பெண்ணின் கணவர் அவரிடம் வாக்குவாதம் செய்து கள்ளக்காதலை முடித்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

பின்னர் தானே அந்த கள்ளக்காதலனை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளார். சம்பவத்தன்று கள்ளக்காதலனை பெண்ணின் கணவர் பொதுயிடத்தில் சந்தித்துள்ளார்.

அவர் மீதிருந்த கடுமையான கோபத்தினால் அங்கேயே அவரை தாக்கினார். இருவரும் நடுரோட்டில் சண்டை போட்டுக்கொண்டனர். பெண்ணின் கணவர் தன்னிடம் இருந்த கத்தியால் கள்ளக் காதலனின் கை மற்றும் கால்களில் குத்தியுள்ளார். வலி தாங்காத காரணத்தினால் கள்ளக்காதலன் தன்னிடமிருந்த கத்தியினால் பலமுறை பெண்ணின் கணவரை குத்தி கொன்றுவிட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் கணவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.