அடுத்தடுத்து 3 முறை கள்ளக்காதலனுடன் உல்லாசம்! கள்ளக் காதலிக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்!

கள்ளக் காதலிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலுறவில் ஈடுபட்ட காதலன், மீண்டும் ஒரு முறை பாலுறவுக்கு அந்தப் பெண் மறுத்த ஆத்திரத்தில் குளத்தில் தள்ளிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது


நவிமும்பையை அடுத்த களம்பொலியில் உள்ள வாகேஸ்வர் கோவில் குளத்தில் நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அந்தப் பெண் அருகில் உள்ள கிதுக்படா கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அந்தப் பெண்ணின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் அந்தப் பெண்ணின் பெயர் சுவர்ணா கதம் எனத் தெரிந்துகொண்டனர். 

பக்கத்து கிராமத்தில் இருந்த சுவர்ணாவின் தாய் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் மேற்கொண்ட விசாரணையில், கணவனை விவாகரத்து செய்துவிட்டு சுவர்ணா கிதுக்படா கிராமத்தில் தனியாக வாழ்ந்துவருவதும் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 

இந்நிலையில் சுவர்ணா குளத்தில் மூழ்கி இறந்த அதே இரவில் கிதுக்படா கிராமத்தில் மனைவி மக்களுடன் வசித்து வந்த ராம் போயிர் என்ற நபர் மாயமானதும் தெரியவந்து. சுவர்ணா மரணத்துக்கும், ராம் போயிருக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் ராம் போயிர் வீட்டுக்கு திரும்பி வந்தார். 

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பயத்தில் முன்னுக்குப்பின் முரணாக உளறிய அவர் பின்னர் உண்மைகளை ஒப்புக் கொண்டார். 3 மாதங்களுக்கு முன் திருமண வீடு ஒன்றில் சுவர்ணாவை சந்தித்தாக ராம் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மதுபான ஆசை காட்டி சுவர்ணாவை வாகேஸ்வர் கோவில் குளம் அருகே வரவழைத்ததாககவும், அங்கு இருவரும் மது அருந்திவிட்டு பாலுறவில் ஈடுபட்டதாகவும், கூறிய அவர் தான் மீண்டும் பாலுறவுக்கு அழைத்துள்ளார். இதனால் இருவரம் மீண்டும் உறவு கொண்டுள்ளனர்.

அதோடு விடாமல் சிறிது நேரம் கழித்து மீண்டும் உறவுக்கு அழைத்துள்ளான் ராம். அப்போது சுவர்ணா மறுத்ததாகவும் அதனால் அவருக்கு மேலும் மது ஊற்றிக் கொடுத்து ஆத்திரத்துடம் குளத்தில் தள்ளிவிட்டுச் சென்றதாக ராம் போயிர் தெரிவித்தார்.

சுவர்ணாவுக்கு நன்கு நீச்சல் தெரியும் என்றபோதும் மதுவின் மயக்கத்தில் இருந்த அவர் நீந்த முடியாமல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராம் போயிரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.