இயற்கை உபாதை கழிக்க சென்ற 30 வயது பெண்! 20 வயது இளைஞன் செய்த தகாத செயல்! பட்டப்பகலில் துணிகரம்!

ஓமலூர் அருகே நடுரோட்டில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற காமக்கொடூரனை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலையில் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஓமலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே காமலாபுரம் நகராட்சியில் 100 நாள் வேலை திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.பல்வேறு பொதுமக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இங்கு வேலை பார்க்கின்றனர். இதனருகில் கரும்பு தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. 30 வயது நிரம்பிய பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார். 

அதே காமலாபுரத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அங்கு மறைந்திருந்து இந்தப் பெண் வருவதை பார்த்துள்ளான். அவர் நெருங்கி வருவதை கண்ட இவன் தன் ஆடைகளை கழற்றி அவரிடம் வேகமாக ஓடி உள்ளான். பின்னர் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு உல்லாசம் அனுபவிக்க அழைத்துள்ளான்.

இதற்கு அந்தப் பெண் அனுமதிக்காமல் எதிர்த்து கொண்டிருந்தார். சில நிமிடங்கள் தள்ளுமுள்ளுக்குப் பிறகு கூச்சலிட்டபடி அந்தப் பெண் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் அந்த காம கொடூரனை துரத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் கையில் கட்டி வைத்து இருந்த காரணத்தினால் பொதுமக்களை மிரட்டி தப்பி சென்றுவிட்டான்.

விரக்தி அடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி ஓமலூர் சாலை பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தது. அப்பகுதி காவல்துறையினர் விரைந்து வந்து அந்த காமக் கொடூரன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பதாக உறுதி செய்தனர்.

பின்னரே பொதுமக்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கினர். மேலும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் மனு ஒன்றை அளித்தனர். பட்டப்பகலில் பெண்ணை பாலியல் சுகத்திற்கு இளைஞன் ஒருவன் வற்புறுத்திய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.