காதல் மனைவியை முதலிரவில் நண்பனுக்கு விருந்தாக்கிய இளைஞன்! சென்னையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் ஒரு நாளுக்கு ஏறக்குறைய 15 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாவது மிகப்பெரிய வருத்தத்தை தரும் செய்தியாக விளங்குகிறது. 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பெரும்பாலும் சில காமகொடூரன்களிடம் சிக்கித் தவிக்கின்றனர்.


சென்னை மாநகரில் மிகவும் பிஸியாக இருக்கும் இடத்தில் ஒன்றாக திரு.வி.க நகர் விளங்குகிறது. இந்தப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக அதேப்பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரு.வி.க நகரை சேர்ந்த ஒரு தம்பதியின் 16 வயது மகள் திடீரென்று மாயமாகி போனதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இது தொடர்பாக ஒரு தனிப்படையை அமைத்து  விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அந்தச் சிறுமி அரக்கோணத்தில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் திரு.வி.க நகரை சேர்ந்த பெருமாள் என்பவரை காதலித்து வந்ததாகவும், அரக்கோணத்திற்கு சென்று இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், பெருமாளின் நண்பரான அரவிந்த் என்பவரின் இல்லத்தில் தங்கியிருந்ததாக கூறினார்.

இருவருமே தன்னை வற்புறுத்தி பல முறை பாலியல் உறவில் ஈடுபத்தியதாக கூறினார்.இதையடுத்து இந்த வழக்கு பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு பெருமாள்,அரவிந்த் ஆகிய இருவரையும் போக்சோ  சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.