என் மனைவியும் உன் கணவனும்..! நண்பனின் துரோகத்தை அவன் மனைவியிடம் கூறிய நபர்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறிய நண்பரின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கபீர் அஹமத் மற்றும் இர்ஃபான் அஹமத் ஆகியோர் வசித்து வந்தனர். 

கபீர் அஹமத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் கத்தார் நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு குடும்பத்தினருடன் வேலை பார்த்து நல்ல முன்னேற்றத்தை அடைந்தனர். ஆனால் இர்ஃபான் அகமது வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கபீர் அஹமதிடம், தன்னுடைய வாழ்வில் நேர்ந்த சோகங்களை பற்றி இர்ஃபான் கூறியுள்ளார். உடனடியாக கபீர் அவரை கத்தார் நாட்டிற்கு அழைத்து சென்று தன்னுடைய குடியிருப்பிலேயே தங்க வைத்து வேலை தேடி வந்துள்ளார். ஆனால் இர்ஃபான் கபீரின் மனைவி மீது ஆசைப்பட்டுள்ளார். 

யாருமில்லாத நேரத்தில் அவரிடம் நெருங்கி பழக முயன்று, தகாத உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த கபீரின் மனைவி கபீரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

உடனடியாக கபீர் தன் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாணியம்பாடி புறப்பட்டுள்ளார். ஆனால் சந்தேகித்த இர்ஃபான் விமான நிலையத்திலேயே மாயமாகி விட்டார்.

அதன் பிறகு கபீரின் குடும்பத்தினர் வாணியம்பாடிக்கு சென்று ஊர் தலைவர்களிடமும், இர்ஃபானின் குடும்பத்தினரிடமும் நடந்தவற்றை கூறியுள்ளார். இது தெரியாத இர்ஃபான் சென்ற வாரம் வாணியம்பாடி வந்துள்ளார். வந்தவுடன் அவரை கையும் களவுமாக பிடித்த ஊர் தலைவர்கள் அவரை கபீரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு வீட்டிற்கு சென்று கபீரின் மனைவியை இர்ஃபானை செருப்பால் அடிக்க கூறியுள்ளனர். அதன்படி கபீரின் மனைவி அடித்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.