பேரிடி! மின்னல் வெட்டு! சிக்கிய குடை மனிதன்! ஆனால் பிறகு நேர்ந்த அதிசயம்!

மின்னலில் இருந்து மயிரிழையில் ஒருவர் தப்பித்து இந்த சம்பவமானது அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் அட்ரியன் என்னும் நகரம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இங்கு வானிலை மிகவும் மோசமாக உள்ளது. அதிகளவில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரை சேர்ந்த ரோமலஸ் மேக்னீல் என்பவர் சாலையில் குடையை பிடித்து நடந்து கொண்டிருந்தார். அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு அடி தள்ளி மின்னல் ஒன்று பலமாக தாக்கியுள்ளது. மிக அருகாமையிலேயே மின்னல் ஒன்று தாக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரோமலஸ் கையில் வைத்திருந்த குடையை கீழே போட்டு நிலை தடுமாறினார்.

பின்னர் சுதாரித்து, குடையை எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார். ஒரு அடி வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமாக ரோமலஸ் உயிர் தப்பியுள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவமானது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.