பெண்கள் ஹாஸ்டலுக்குள் புகுந்த அந்த பொருட்களை மட்டும் திருடிய நூதன ஆண்..! என்ன தெரியுமா?

இணையதள சேவையில் பிரச்சனை இருப்பதாக கூறி பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் 34 செல்போன்களை திருடியதாக சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையிலுள்ள அரும்பாக்கம், திருமங்கலம்,நொளம்பூர், ஜே.ஜே. நகர், கோட்டூர்புரம், பொன்னேரி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பெண்கள் விடுதியில் ஒரே மாதிரியான கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளன. காலை 7 மணி முதல் 8 மணிக்குள் இளைஞர் ஒருவர் பெண்கள் விடுதிக்குள் நுழைகிறார்.

அங்குள்ள இணையதள சேவையில் குறை இருப்பதாகக் கூறி பெண்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சார்ஜ் போட கூறுகிறார். அவ்வாறு ஒரே இடத்தில் உள்ள செல்போன்களை சுருட்டிக் கொண்டு அந்த இளைஞர் பெண்கள் விடுதியிலிருந்து தப்பித்து செல்கிறார்.

கிட்டத்தட்ட 34 பெண்கள் இந்த கொள்ளை சம்பவங்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அண்ணாநகர் துணை கமிஷனர் அளித்த உத்தரவின் பெயரில் காவல்துறையினர் குழு அமைத்து சம்பந்தப்பட்ட இளைஞனை குறிவைத்து தேடி வந்துள்ளனர். அந்த குற்றவாளி ஹெல்மெட்டை கழட்டாமல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அறுவடையாக சிசிடிவி கேமரா பதிவுகளை உபயோகபடுத்தி சம்பந்தப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை நடத்தியது சம்பந்தப்பட்ட இளைஞர் தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபருடன் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.