எவன்டா என் பொண்டாட்டிய படுக்க கூப்பிட்டது? பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்திற்கு அரிவாளுடன் வந்த கணவன்! தேனி பகீர்!

மனைவியை ஆபாச வார்த்தைகளில் திட்டியோரை கணவர் அரிவாள் எடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவமானது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் கம்பம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு பஜாஜ் நிதி நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திலிருந்து  மாதாந்திர தவணை தொகை மூலம் பெண் ஒருவர் செல்போன் வாங்கியுள்ளார்.

தொடக்கத்தில் மாதாந்தர தவணையை சரிவர செலுத்தி வந்தாலும், அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக அவரால் சரிவர செலுத்த இயலவில்லை. இதனால் கோபமடைந்த ஊழியர்கள் அவரது செல்போனில் அழைப்பு விடுத்து, ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் அந்த பெண் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

மேலும், தனக்கு நேர்ந்த அவமானத்தை பற்றி தன் கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அரிவாளை எடுத்துக்கொண்டு அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தார். அப்போது ஊழியர்கள் அவரை கண்டு மிகவும் பயந்துள்ளனர். 

இதனிடையே சில ஊழியர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, பின்பக்கமாக நிறுவனத்தை பூட்டி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எதிர்பாராவிதமாக காவல்துறையினர் வருவதற்கு முன்னரே அந்த கதவு திறக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட நபர் அங்கிருந்து தப்பி சென்றார். 

பட்டப்பகலிலேயே ஆண் ஒருவர் அரிவாள் எடுத்துக்கொண்டு நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த சம்பவமானது கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.