உறக்கத்தில் இருந்த நர்சுகளிடம் செக்ஸ் சில்மிஷம்! உமன் ஹாஸ்டலுக்குள் புகுந்த இளைஞனால் விபரீதம்!

பெண்கள் விடுதியொன்றில் நுழைந்த இளைஞன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், அங்கிருந்து 80 ஆயிரம் ரூபாய் திருடி சென்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னை நகரில் முக்கியமான சாலைகளில் ஒன்றாக பசுமை வழி சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் புகழ்பெற்ற செவிலியர் விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியில் 3 தளங்கள் உள்ளன. 5 செவிலியர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு மர்ம இளைஞர் ஒருவர் செவிலியர் விடுதியில் நுழைந்துள்ளார். வாயிலிலிருந்து விடுதிக்குள் நுழையும் வரை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேராக மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு செவிலியர்கள் காற்றோட்டமாக இருப்பதற்காக வாயிலை திறந்து வைத்திருந்தனர்.

இளைஞர் செவிலியர்களிடம் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த செவிலியர்கள் கை போடுவதாக எண்ணி உறங்கி கொண்டிருந்தனர். அப்போது, அருகிலிருந்த செவிலியரின் பையில் இருந்து 80,000 ரூபாயை எடுத்துள்ளார்.

மீண்டும் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது அருகில் இருந்தவர்கள் கண்டு கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அனைவரும் ஒன்று திரண்டு வருவதற்குள் அங்கிருந்து இளைஞர் தப்பி சென்று விட்டார். 

சம்பவம் பற்றி அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து இளைஞரை அடையாளம் கண்டனர். அருகிலுள்ள சட்டக் கல்லூரியில் படித்து வரும் சரத்குமார் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். 

அப்பகுதியில் இருந்து வெளியேறிய இளைஞர், ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினரை கண்டு அஞ்சி சாலையோரத்தில் படுத்துக்கொண்டார். காவல்துறையினர் சந்தேகித்து சோதித்த போது அவர் சட்டை பையில் 80,000 ரூபாய் இருந்துள்ளது.

விசாரணை நடத்தியதில், தான் செவிலியர் விடுதியிலிருந்து திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது பிரதான சாலையான பசுமை வழி சாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.