குடியை விட சத்தியவாக்கு! இது தான் கடைசி என கூறி குடித்துக் கொண்டே இருந்தவருக்கு நேர்ந்த விபரீதம்! குடி இன்பம் துன்பத்தில் முடிந்த பரிதாபம்!

அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இளைஞர் நடுரோட்டில் மயங்கி விழுந்து பலியான சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கட்டாம்பாளையம் என்னும் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி விட்டது.

இந்நிலையில் கார்த்திகேயனுக்கு அதிகளவில் மதுப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வந்து மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மனைவியும், உறவினர்களும் எவ்வளவோ கண்டித்தும் கார்த்திகேயன் ஆனால் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர இயலவில்லை.

இந்நிலையில் உறவினர்கள் சிலரின் ஆலோசனைப்படி கிராமத்திற்கு அருகேயுள்ள அய்யனார் கோவிலில் சத்தியவாக்கு அளித்து கையில் கயிறு கட்டிக்கொண்டால் மது பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம் என்று கார்த்திகேயன் யோசித்துள்ளார்.

சம்பவத்தன்று அய்யனார் கோவிலுக்கு சென்று சத்தியவாக்கு அளிப்பதற்காக கார்த்திகேயன் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அவ்வழியே சென்றபோது தான் தினமும் செல்லும் மதுக்கடையை பார்த்து நின்றுள்ளார். நாளை முதல் மது அருந்த முடியாது என்ற ஏக்கத்தில் இன்றே விரும்பிய அளவிற்கு மது அருந்தி விடவேண்டும் என்ற எண்ணத்துடன் கார்த்திகேயன் மதுக்கடைக்குள் சென்றார்.

போதை தலைக்கேறிய பிறகும் விடாமல் மிகவும் அதிகமான அளவிற்கு கார்த்திகேயன் மது அருந்தினார். பின்னர் தள்ளாடியபடி அய்யனார் கோவிலுக்கு செல்ல முயன்ற போது, நடுரோட்டில் பரிதாபமாக மயங்கி விழுந்து பலியானார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

இந்த சம்பவமானது கட்டாம்பாளையம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.