கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கொடூர கணவன்..! காரணம் ஒரே ஒரு கேள்வி..! பதற வைத்த சம்பவம்!

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட பின்னர் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ். இவருடைய வயது 32. இவர் பிப்ரவரி மாதத்தில் அதே மாநிலத்தை சேர்ந்த நேஹா என்ற 27 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் அன்னியோன்னியமாக இருந்தாலும், நாளுக்கு நாள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கின. இதனிடையே நேஹா கர்ப்பமானார்.

இதனால் அடிக்கடி இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பங்கஜ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

வழக்கம்போல நேற்று முன்தினம் பங்கஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த பங்கஜ் தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் சகோதரனான பவானுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, நிகழ்ந்தவற்றை கூறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

அழைப்பை துண்டித்தவுடன் பங்கஜ் தன்னையும் சுட்டு கொண்டுள்ளார். பவான் பங்கஜின் வீட்டிற்கு சென்றபோது, அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். நேஹா உயிருக்கு போராடி கொண்டிருந்ததால் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.