2வது மனைவியின் நடத்தை! தூங்க முடியாமல் தவித்த கணவன்! வீட்டில் நள்ளிரவில் அரங்கேற்றிய பயங்கரம்! திருப்பூர் திகுதிகு!

மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்துள்ள சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட மேற்கு வீதியில் நிஸார் அஹமது என்ற 37 வயது நபர் வசித்து வந்தார். இவர் ஒரு கழிவு குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருடைய முதல் மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனிடையே 2-வதாக இவர் ஹசீனா என்ற 21 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அகமதுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் தினமும் ஹசீனாவிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் அவருக்கு தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகமும் இருந்து வந்துள்ளது.

நேற்று காலை முன்னர் வழக்கம்போல கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட தொடங்கியுள்ளது. ஆத்திரம் தலைக்கேறியதால் அகமது, கத்தியால் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை பார்த்து சோகம் அடைந்த அவர், தண்ணையும் கத்தியால் குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2 குழந்தைகளும் அழுது கொண்டிருந்தன.

ஹசீனாவின் தாயாரின் வீடானது அருகில் உள்ளது. குழந்தைகளின் அழுகையை கேட்டு விரைந்து ஓடி வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்தார். அப்போது மகளும், மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஊத்துக்குளி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் ஹசீனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மயங்கி கிடந்த அஹமதின் உடலை அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அஹமதின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.