8 மாத கர்ப்பிணி மனைவி! பெற்ற தாய்! பெற்றெடுத்த மகன்! 3 பேர் கொடூர கொலை! இளைஞன் சொன்ன பகீர் காரணம்!

இளைஞர் ஒருவர் தாய், மனைவி மற்றும் குழந்தைகள் சேர்த்து 5 பேரை கொலை செய்த சம்பவமானது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடர்மா மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஹரிஜன் டோலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கங்கோ தாஸ். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருடைய தாயின் பெயர் சாந்தி. சாந்தியின் வயது 60. இவருக்கு ஷீலா தேவி என்ற 27 வயது மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஷீலா தேவி 3-வது முறையாக கர்ப்பமானார். 

நேற்று அதிகாலை திடீரென்று தாஸ், ஷீலா தேவியின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. உடனிருந்த தாய், மற்றும் சில குழந்தைகள் தாஸை சமரசம் செய்ய முயற்சித்தனர்.

ஆத்திரம் தலைக்கேறிய தாஸ், தாய், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் ஒரு உறவினரின் குழந்தை ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கொலை முயற்சியில் தாஸின் தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது. அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தலைமறைவாகியிருந்த தாஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.