உல்லாசம் அனுபவிக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! கள்ளக்காதலிக்கு கள்ளக்காதலனால் நேர்ந்த கொடூரம்!

கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து அவளது உடலை தண்டவாளத்தில் வீசி சென்ற சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே புத்தூர் என்னும் பகுதியில் முனியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக இருவரும் பிரிந்து  வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே இவருக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

நேற்றிரவு முனியம்மாள் வீட்டுக்கு செந்தில் சென்றுள்ளார். அப்போது இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்போது திடீரென்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் முனியம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை புதூர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் வீசியுள்ளார். பொதுமக்கள் சடலத்தை பார்த்தவுடன் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

காவல்துறையினர் விரைந்து வந்து முனியம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் செந்தில் குமாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கொண்டலாம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.