இன்று அவளுக்கு பிறந்த நாள்..! கதறியபடியே உயிரிழந்த கணவன்..! மறுநாளே குழந்தை பெற்ற மனைவி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

மனைவியின் பிறந்தநாளன்று கணவர் இறந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பிரசாந்த் கோமிரெட்டி. இவர் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய வயது 38. இவருடைய மனைவியின் பெயர் திவ்யா. இத்தம்பதியினருக்கு 3 வயதான அழகிய பெண் குழந்தையுள்ளது.

அதே பகுதியில் இயங்கிவரும் "அமெரிக்கன் ஏர்லைன்ஸ்" நிறுவனத்தில் பிரசாந்த் பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களாகவே பிரசாந்த் அடிக்கடி உடல் சோர்வால் அவதிப்பட்டு வந்தார். மேலும் கைகால் வலி, கழுத்து வலி ஆகியன அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

திவ்யா இதே நேரத்தில் நிறைமாத கர்ப்பிணியாக செயல்பட்டு வந்தார். எந்த நேரத்திலும் குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை கூறியிருந்தனர். எதிர்பாராவிதமாக சில நாட்களுக்கு முன்னர் பிரசாந்துக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

திவ்யா தன்னுடைய பிறந்தநாளில் கணவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் அவருடைய தலையில் இடி விழுந்தது போன்று கணவரின் இறப்பு செய்தியே அவருக்கு கிடைத்தது. மறுநாளே நிறை மாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். 

பிரசாந்த் பணியாற்றி வந்த நிறுவனம், இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடை ஈட்டி வந்தது. அதன்படி தற்போது வரை நன்கொடையில் 2.7 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது டெக்சாஸ் மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.