பாதி வெந்த நிலையில் தூக்கி வீசப்பட்ட மகன் சடலம்..! பதறி அடித்துக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடி தாய் செய்த செயல்! நெஞ்சை உலுக்கும் காரணம்!

சாதியை காரணம் காட்டி இறந்த வாலிபரை பொதுமக்கள் தகன மேடையில் எரிக்க விடாமல் செய்த சம்பவமானது அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கற்பகக்குமார் என்பவர் பிறந்தார். இவர் தஞ்சாவூர் முடி திருத்துகம் இயக்கி வந்தார். ஊரடங்கு தொடங்கியதில் இருந்து தற்போது வரை முடித்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவரால் கடையை திறக்க இயலவில்லை. இவர் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.

சுற்றுவட்டார பகுதிகளில் மூடப்பட்டிருந்த கடைகளை பார்வையிடுவதற்காக இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி விபத்தில் சிக்கி கற்பகக்குமார் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி சடங்குகள் முடிந்த பின்னர் உடலை தகனம் செய்வதற்காக அப்பகுதியில் இயங்கி வந்த போது சுடுகாட்டின் தகன மேடையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அப்போது திடீரென்று சுடுகாட்டிற்கு விரைந்து வந்த மாற்று சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனையை பெரிதாக்கினர். மேலும் தகன மேடையில் மாற்று சாதியினரை எரிக்க அனுமதிக்கமாட்டோம் என்று கராராக கூறியுள்ளனர். உடனடியாக அப்பகுதியில் காவல்துறையினர் விரைந்து வந்து சமாதானம் செய்ய முயன்றனர். 

ஆனால் அவர்களால் இயலவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றி காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானம் பேசி பிணத்தை தகன மேடையின் கீழே வைத்து எரித்து அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். இந்நிலையில் கற்பக குமாரின் சடலம் பாதி எரிந்து பாதி எறியாமல் இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் சென்றடைந்தது.

சுடுகாட்டிற்குள் பெண்கள் நுழைய கூடாது என்பதை தெரிந்து கொண்ட பின்னரும் அந்தத் தாய் தன்னுடைய மகனின் சடலத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சென்று பாதி எரிந்து பாதி எரியாமல் கிடந்த மகனின் சடலத்திற்கு கொள்ளி வைத்துள்ளார்.

இந்த நவீன யுகத்திலும் சாதியை வைத்து பேதங்கள் பிணம் வரை ஊடுருவியுள்ளது. அந்த இளைஞர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை தவிர எந்த ஒரு தவறையும் செய்ததாக தெரியவில்லை. பெரியார், பெரியார் என்று ஒலித்து கொண்டிருக்கும் தமிழகத்தில், சாதியை மட்டும் ஒழிக்க இயலவில்லையே என்ற ஆதங்க குரல்கள் ஒலித்து கொண்டே இருக்கின்றன.