அவருக்கு கொரோனா! என்னை விட்டுடுங்க.! தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுத்து மகன் செய்த செயல்! அதிர்ச்சி சம்பவம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய மகன் மறுத்த சம்பவமானது மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியபிரதேச மாநிலத்தில் வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

உடனடியாக மருத்துவ நிர்வாகத்தினர் அவருடைய உடலை அவரின் மனைவி மற்றும் மகனான சந்தீப் என்பவரிடம் வழங்கியுள்ளனர். ஆனால் இருவரும் கொரோனா பாதித்த நபர்களின் சடலத்தை இறுதி சடங்கு செய்யும் வழிமுறை தங்களுக்கு தெரியாததால் அவரின் உடலை வாங்க மறுத்துள்ளனர். 

ஆதலால், அதிகாரியின் உடலை இறுதி சடங்கு செய்யும் அதிகாரங்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களின் உதவியுடன் அப்பகுதி தாசில்தாரான குலாப் சிங் பாகேல் புடலை அடக்கம் செய்தார்‌. அடக்கம் செய்வதற்கு முன்னர் ஊழியர்களுக்கு பிபிஇ உடைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்த இறந்துபோன அதிகாரியின் மகனான சந்தீப் கூறுகையில், "சொந்த ஊரான சுஜல்பூருக்கு தந்தையின் சடலத்தை எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால், எங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதற்கு தடை ஏற்பட்டது. மேலும், எங்களுடைய ரத்த பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.